Tuesday, June 26, 2012

உன்னை அறிவாய்



அது மலைப்பாங்கான ஒரு தேசம்.
அங்குள்ள சாலைகள் கல்லும், கரடுமாக இருந்தன. அவை நடப்பவர்கள் காலில் குத்தித் துன்புறுத்தின. "எல்லாச் சாலைகளிலும் மாட்டுத் தோலை விரிக்க உத்தரவிடப் போகிறேன்" என்றான் மன்னன். அப்போதுதான் நடப்பதற்கு மெத்தென்று இருக்கும் என்பது அவனது எண்ணம்.
"இது என்ன அறியாமை!" என்றார் குரு. "தேசம் முழுவதும் தோலால் போர்த்துவதைவிட உன் கால்களில் இரண்டு தோல் துண்டுகளை அணிந்தால் போதுமே!" என்று அறிவுரை கூறினார் அவர்.
இதைக் கேட்ட மன்னன் விழிப்புணர்வு பெற்றான்.
உலகத்தையே உனக்கேற்ப வளைப்பதைவிட உன் மனத்தை உலகுக்கேற்ப வளைத்துக் கொள்!" என்கிறது ஜென்.