Tuesday, June 26, 2012

மனம் போன வழியில் ….


மனம் போன வழியில் ….
ஜென் குரு ஒருவர் ஞானத்தின் திரு உருவமாக மதிக்கப்பட்டார். ஒருமுறை அவர் யாத்திரை கிளம்பினார். அப்போது கடும் பனியும், குளிருமாய் இருந்தது. பனிக்காற்று வீசி அனைவரையும் கலங்கடித்துக் கொண்டிருந்தது.
அவரைப் பார்த்து இந்தப் பனியில் எப்படிப் போவீர்கள்? என்று கேட்டார் ஒருவர்?
என் மனம் முன்பே அங்கே போய் சேர்ந்து விட்டது. அது போன வழியில் அதைப் பின் தொடர்ந்து போவதில் எனக்கு என்ன சிரமம்? என்றார் அவர் தாமதிக்காமல்.
நீதி : குளிரையும், வெப்பத்தையும் உணர்வது உடல்தான் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.