Tuesday, June 26, 2012

ஞானோதயத்தின் கதை



இளம் துறவியான சியூனோ நீண்ட காலமாக எங்காகுவைச் சேர்ந்த புக்கோ என்ற ஜென் மாஸ்டரிடம் ஜென் போதனைகளைக் கற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு தியானத்தின் பலன் மட்டும் கை கூடாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு இரவில் அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது.

ஒரு மூங்கிலால் இணைக்கப்பட்டிருந்த பழைய வாளி ஒன்றை அவர் தூக்கிக் கொண்டு சென்றார். அப்போது திடீரென மூ்ங்கில் உடைந்து வாளியின் கீழ்ப்புறம் அறுந்து விழுந்தது. அப்போதுதான் சியூனோவுக்கு ஞானோதயம் பிறந்தது. அதை ஒரு கவிதையில் அவர் வடித்துக் கூறினார்.

நான் அந்த பழைய வாளியை காக்க முயற்சித்தேன்
ஆனால் மூங்கில் பலவீனமாக இருந்தாதல் அது உடைந்தது
அதனால் வாளியின் கீழ்ப் பகுதியும் உடைந்து போனது
வாளியில் தண்ணீர் இல்லை
தண்ணீரில் தெரிந்த நிலவையும் காணவில்லை