Tuesday, June 26, 2012

ஜென் மார்க்கம் என்ன?



ஜென் துறவியான ஜோஷு, தனது 60வது வயதில் ஜென் மார்க்கம் குறித்து கற்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரையிலும் அவர் கற்றார். அப்போதுதான் அவரால் முழுமையாக ஜென் போதனைகளை கற்றுத் தேற முடிந்தது. அதன் பிறகு தனது 130 வயது வரையில் அவர் ஜென் போதனைகளை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு நாள் அவரது மாணவர் ஒருவர், எனது மனதை காலியாக வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு ஜோஷு, அதை வெளியே கொட்டி விடு என்றார். இதைக் கேட்ட அந்த மாணவர், எனது மனதில்தான் எதுவும் இல்லையே, பிறகு எப்படி நான் கொட்டுவது என்று கேட்டார்.

அதற்கு ஜோஷு புன்னகையுடன், அப்படியானால் அதை வைத்துக் கொள் என்றார்.