Tuesday, June 26, 2012

சொர்க்கம் என்றால் என்ன?



ஒரு பாலைவனத்தில் இரண்டு பேர் வந்த வழியை மறந்து போய் மாட்டிக் கொடுத்து தவித்தனர். பசியிலும், தாகத்திலும் அவர்கள் வாடினர். அங்குமிங்குமாக அலைந்த அவர்களுக்கு ஒரு பெரிய சுவர் ஒன்று தென்பட்டது. உடனே அங்கு போனார்கள். சுவரின் மறுபக்கத்தில் ஒரு நீர் வீழ்ச்சி இருப்பதையும், அங்கு பறவைகளின் சப்தம் கேட்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.

மேலும் மறுபக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளைகள் இவர்கள் இருந்த பக்கமாக, சுவருக்கு மேல் நீட்டிக் கொண்டிருந்ததையும், அதில், சுவையான பழங்கள் இருப்பதையும் கண்டனர்.

இதையடுத்து அவர்களில் ஒருவர் கஷ்டப்பட்டு அந்த சுவரின் மீது ஏறி மறுபக்கம் சென்றார். போனவர் அப்படியே போய் விட்டார். இன்னொருவரோ அப்படிப் போகவில்லை. மாறாக பாலைவனத்தில் தன்னைப் போல வழியை மறந்து தவிப்பவர்களுக்கு, இந்த பாலைவனச் சோலை இருப்பதைக் காட்டி அவர்கள் மீண்டு செல்ல உதவியாக அங்கேயே தங்கி விட்டார்.

இப்போது தெரிகிறதா எது சொர்க்கம் என்று...?