Tuesday, June 26, 2012

மழையாக பொழிந்த மலர்கள்



புத்தரின் சீடரான சுபுதிக்கு, வெறுமையின் உண்மையான அர்த்தம் தெரிந்திருந்தது.

ஒரு நாள் மனம் முழுக்க வெறுமை புடை சூழ ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அந்த மரத்தின் மலர்கள் மழை போல அவர் மீது விழுந்தன.

அப்போது, மேலிருந்து கடவுள்கள், உனது வெறுமையின் பேச்சைக் கேட்டு நாங்கள் உன்னைப் பாராட்டுகிறோம் என்றனர். அதற்கு சுபுதி, நான் வெறுமை குறித்துப் பேசவில்லையே என்றார்.

நீயும் பேசவில்லை, நாங்களும் கேட்கவில்லை என்று கடவுள்கள் பதிலளித்தனர். தொடர்ந்து மலர்கள் சுபுதியைச் சூழ்ந்து வீழ்ந்தவண்ணம் இருந்தன.