Tuesday, June 26, 2012

திருடனின் முதல் பாடம்



திருடனின் மகனுக்கு திருட்டுத் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தனது தந்தையிடம் சென்று தனக்கு தொழில் கற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டான்.
அதற்கு ஒத்துக் கொண்ட திருடன் தனது மகனை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய பங்களாவிற்குள் சென்றான். அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். உடனே திருடன் தனது மகனிடம் வீட்டிற்குள் போய் சில துணிகளையாவது திருடிக்கொண்டு வா என்று அனுப்பினான்.
மகன் உள்ளே சென்ற உடன் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்கத்திற்கு வந்து கதவை தட்டினான் பெரிய திருடன். பின்னர் யாரும் பார்க்கும் முன்பாக அங்கிருந்து நழுவினான். தகப்பனின் இந்த செயலைக் கண்டு பயந்து நடுங்கிப் போனான் மகன். ஒருவாறு சமாளித்து வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்கு வந்ததும் முதல் காரியமாக, "ஏன் அப்பா இவ்வாறு செய்தீர்கள் ?'' என்று கோபமாக கேட்டான் மகன். "யார் கையிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பி வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது என்று கூறினான்"
அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த தந்தையோ, " மகனே திருட்டுத் தொழிலின் முதல் பாடத்தை இன்று நீ கற்றுக்கொண்டாய் என்று கூறினான்.