Tuesday, June 26, 2012

ஓஷோவின் ஜென் குரு ரின்சாய் கதை



ஜென் குரு ரின்சாய் பற்றி ஓஷோ ஒரு அழகான கதை கூறினார்.
ரின்சாய் அவரது குருவுடன் சுமார் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒரு நாள் ரின்சாய் தனது குருவின் இருக்கையில் அமர்ந்தார். அப்போது அறைக்குள் வந்த குரு ரின்சாய் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். உடனே அமைதியாகச் சென்று ரின்சாயின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை என்றாலும், எண்ணங்கள் பேசிக் கொண்டன.
ரின்சாய் குருவைப் பார்த்து, நான் உங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளேனே, உங்களை நான் அமதிக்கவில்லையா, நான் நன்றி மறந்துவிட்டேனா என்று கேட்டார்.
அதற்கு குரு புன்னகை புரிந்துவிட்டு கூறியதாவது, நீ மாணவனாக இருந்து சீடன் ஆனாய் தற்போது குவாகிவிட்டாய். இனி நீ என் வேலைகளை பகிர்ந்து கொள்வாய் அல்லவா. அதனால் எனக்கு சந்தோஷம் தான். நான் தினமும் இங்கு வரத் தேவையில்லை. வேலையைச் செய்ய ஒருவர் உள்ளார் என்று எனக்கு தெரியும் என்றார்.
ஞானம் பெற்றவர்களுக்கான உதாரணம்.