நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக
விளங்கினார் ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின்
போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து
பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு
கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.
பூதக்கண்ணாடியை பிடித்த தாயின்
கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு
தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு
நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன்
பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார்,
ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால்
ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும்
உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என தாயார்
அவருக்கு அறிவுரை கூறினார்.
இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் ஆனார்.
இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் ஆனார்.