திராட்சை
ஒரு சத்தான எளிதில் செரிக்கக் கூடிய சுவையான பழம். திராட்சை மலைப்
பள்ளத்தாக்குகளில் நன்கு விளையும். பச்சை, கருப்பு மற்றும் நீல
நிறங்களிலும் கிடைக்கிறது.
100 கிராம் திராட்சையில் தண்ணீர் 92 விழுக்காடும், புரோட்டீன் 0.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.2 விழுக்காடும், மாவுச்சத்து 7 விழுக்காடும் உள்ளன. கால்சியம் 20 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 20 மில்லி கிராமும், 0.2 மில்லி கிராமும், வைட்டமின் `சி' 31 மில்லி கிராமும் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி சிறிதளவும் உள்ளன.
மலச்சிக்கல்
திராட்சையில் உள்ள குளூகோஸ், சுக்ரோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் இரைப்பையை சுத்தம் செய்வதுடன் உடனடி மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதற்கு தினமும் 350 கிராம் திராட்சை உண்ண வேண்டும். வயிற்றில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளையும் உடனடியாக சரி செய்யும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு.
இதயக் கோளாறு
இதயக் கோளாறு உள்ளவர்கள் தினமும் ஒருவேளை உணவாக திராட்சையை மட்டும் உண்டு வர வேண்டும். இதனால் இதயத்தில் இருக்கும் வலி சிறிது சிறிதாகக் குறைந்து இதயம் பலப்படுவதுடன் நெஞ்சு படபடப்பும் சரியாகும்.
ஒற்றைத் தலைவலி
ஜம்ஷெத்பூரின் ராஜாவுக்கு திராட்சை தயாரிக்கப்பட்ட ஜூஸை பாட்டில்களில் அடைத்து தினமும் அருந்துவாராம். அரண்மனையில் உள்ளவர்கள் அதனைக் குடிக்காமல் இருக்க அப்பாட்டில்களில் விஷம் உள்ளது எனக் கூறி விடுவாராம். சில நாட்களாக ஒற்றை தலைவலியால் துன்பப்பட்ட அரசி எந்த மருந்தும் பயன் தராத நிலையில் விஷத்தை அருந்தி உயிர்விட நினைத்து திராட்சை ஜூஸை சிறிது சிறிதாக இடைவெளி விட்டு குடித்து விட்டு, தூங்கி விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், உயிர் போகவில்லை. ஆனால் ஒற்றைத் தலைவலி மறைந்து விட்டதாம்.
திராட்சை நம்முடைய பற்களில் ஏற்படும் நோய்களைக் களைவதுடன் ஈறுகள் உறுதியாக இருப்பதற்குத் தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.
திராட்சை இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கலினால் ஏற்படும் இழுப்பு நோய் வராமல் தடுக்கின்றது.
கல்லீரலைப் பலப்படுத்தி நன்கு வேலை செய்ய ஊக்குவிக்கிறது.
திராட்சை பழத்தை நன்றாகக் கழுவிய பின்னரே உண்ண வேண்டும். ஜூஸ் தயாரித்தாலும் உடனே அருந்தினால் தான் முழுப் பயனும் நமக்கு கிடைக்கும். ஜூஸை விட பழங்களாகவே சாப்பிடுவது நல்லது. உலர்ந்த பழங்களை ஊற வைத்து உண்ணலாம். சளி, இருமல், தொண்டை வலி இருக்கும் காலங்களில் திராட்சையை தவிர்ப்பது நலம்