கீரைகள் (100 கிராம் அளவு)
|
முளைக்கீரை :
இரும்பு 22.9 மி.கி., கால்ஷியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும். (கீரையைச் சிறிது நேரமே வேகவைக்கவும்)
அகத்திக் கீரை :
கால்ஷியம் 1130 மைக்ரோ கிராம், இரும்பு 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. ரத்தசோகை, எலும்பு வலுக்குறைவு ஆகிய நோய்கள் வராமல் காக்கும். (மூடப்பட்ட பாத்திரத்தில் வைத்துச் சமைக்கவும்)
பொன்னாங்கண்ணி :
இரும்பு 1.63 மி.கி, கால்ஷியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன. இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகை உண்டாகும். கால்ஷியம் குறைவால் பற்களும் எலும்பும் வலிமை குறையும். (பச்சைக் கீரைகளை அதிக நேரம் வதக்க வேண்டாம்)
பசலைக் கீரை :
வைட்டமின் ஏ 5580 மைக்ரோகிராம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு 1.14 மி.கி., பொட்டாஷியம் 306 மி.கி ஆகியவை உள்ளன. பார்வைக் கோளாறைக் தடுக்க உதவும் வைட்டமின் ஏ உடல் சோர்வைத் தடுக்க உதவும் பொட்டாஷியச் சத்து ஆகியவை பசலைக் கீரையில் உள்ளன.
வெந்தியக் கீரை :
கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)
புளிச்ச கீரை :
இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன.
பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்)
முட்டைகோஸ் :
வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.
முருங்கைக் கீரை :
வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கறிவேப்பிலை :
வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும். புதினா கீரை : ·போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.
கொத்தமல்லி :
கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.
மணத்தக்காளி:
இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும். |
Labels
- BODY AND MIND (11)
- BRAIN TEASERS AND IQ (4)
- COATING AND LAMINATING (17)
- COMPOSITES (35)
- Denim (1)
- ENERGY CONSERVATION (2)
- ENVIRONMENT (4)
- FIBRE SCIENCE (42)
- FOOD IS MEDICINE (18)
- GARMENTS (2)
- INTERESTING FACTS AND PPT (8)
- KNITTING (10)
- LEARNING FROM LEADERS (3)
- MOTIVATION AND ATTITUDE (4)
- NANOTEXTILES (3)
- NONWOVENS (50)
- OTHERS (2)
- PERSONALITY DEVELOPMENT (9)
- PHYSICAL PROPERTIES OF FIBRES (6)
- PROCESS CONTROL AND QUALITY (35)
- QUALITY MANAGEMENT AND STATISTICS (4)
- Questions and Answers (4)
- RELAX PLEASE (2)
- SHORT FILMS AND INTERESTING VIDEOS (13)
- SPINNING (45)
- TECHNICAL TEXTILES (53)
- TEXTILE CHEMICAL PROCESSING (8)
- Textile Question Bank (2)
- WEAVING (45)
- WORLD CLASSIC CINEMA (24)
- ZEN stories (55)